மாடு துரத்தியதால் பயந்து ஓடி வந்த நபர்..பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாடு துரத்தியதால் பயந்து ஓடிய நபர் பேருந்தில் அடிபட்டு உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டம் மங்கை மடல் பெருந் தோட்டத்தை சேர்ந்த காசிநாதன் என்பவர் சிதம்பரம் அரசு மருத்துவமனை எதிரே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிரே வந்த மாடு ஒன்று அவரை முட்ட வந்த பொழுது பயந்து போன காசிநாதர் சாலையின் நடுவே சென்றுள்ளார். அப்பொழுது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த காசிநாதன் உயிரிழந்தார்.





