திருச்சி அருகே காரில் வைத்து ஆண் ஒருவர் எரித்துக் கொலை
திருச்சி சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி வனப்பகுதியில் காரில் வைத்து ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் கார் ஒன்று எரிந்து கொண்டிருப்பதை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த நபர் காரில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
கொலை நடந்த இடத்திற்கு அருகே உள்ள டவரில் பதிவான செல்போன் எண்கள் மற்றும் சமயபுரம் சுங்கச்சாவடியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு உயிரிழந்தவர் திருச்சி காட்டூரைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்றும், சென்னையில் மசாஜ் சென்டர் நடத்தி வந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதே இடத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 4 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தச்சங்குறிச்சி பகுதி என மக்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




