உளுந்தூர்பேட்டை அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள டி.மாவிடந்தல் என்ற இடத்தில் காற்றாலை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற ட்ரைலர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாற்று வழியில் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.





