--- --:--:-- --

மீண்டும் அதிமுகவில் இணையும் முக்கிய ஆதரவாளர்!

2

.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மாநிலங்களவை எம்.பி. தர்மர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைய உள்ளார். இன்று மாலை இபிஎஸ் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.
2022ஆம் ஆண்டு நடந்த மாநிலங்களவை தேர்தலில், ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான முதுகுளத்தூரைச் சேர்ந்த ஆர்.தர்மருக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு ஓபிஎஸ் மூலம் கிடைத்தது.

 

அதிமுகவில் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பலரும் மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியிட வாய்ப்பு கேட்டு முயற்சித்தபோதும் அப்போதைய ஒன்றியச் செயலாளரான தர்மருக்கு வாய்ப்பு ஓ.பன்னீர்செல்வத்தின் மூலம் தர்மருக்கு கிடைத்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக, ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த தர்மர் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்க முடிவு செய்துவிட்டார். இன்று மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் அவரைச் சந்தித்து மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்து கொள்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

தொடர்ச்சியாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள், திமுக மற்றும் மாற்றுக் கட்சிகள் இணைந்து வரும் நிலையில் தர்மர் மீண்டும் அதிமுகவிற்கு செல்கிறார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம் ஆகியோர் திமுகவில் இணைந்த நிலையில், நடப்பு எம்பியாக இருக்கும் தர்மர் அதிமுகவில் இணைகிறார்.

Right Menu Icon