--- --:--:-- --

வண்டலூர் பூங்காவில் பராமரிப்பாளரை கடித்த நீர்யானை..!

10

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நீர்யானை கடித்ததில் பராமரிப்பாளர் படுகாயம் அடைந்தார். நீர் யானை பராமரிப்பாளரான 52 வயது குமார் என்பவர் வழக்கம் போல நீர்யானைக் கூண்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

 

அப்பொழுது திடீரென கடித்ததில் படுகாயம் அடைந்தார். அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக குமாரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon