இந்து பையனோட போவியா.. புர்காவை கழட்டு என இஸ்லாமிய பெண் மீது தாக்குதல்..!
பெங்களூருவில் வேற்று மதத்தை சேர்ந்த ஆணுடன் நடந்து சென்ற இஸ்லாமிய பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் இஸ்லாமிய பெண் ஒருவர் இந்து சமூகத்தைச் சேர்ந்த தனது நண்பருடன் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது ஜாகிர் என்ற நபர் அவர்களை தடுத்து நிறுத்தி இந்து மதத்தை சேர்ந்த ஆணுடன் ஏன் சுற்றித்திரிகிறீர் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்பொழுது அந்த பெண்ணை பிடித்து தள்ளியதுடன் புர்காவை கழட்டுமாறும் ஜாகீர் வற்புறுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் இஸ்லாமிய பெண் நடித்த புகாரின் பேரில் ஜாகிர் கைது செய்யப்பட்டுள்ளார்.






