மாணவர்களை ஆணியில் தொங்கவிட்ட கொடூரம்..!
சேலம் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களை தொங்கவிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பனமரத்துப்பட்டி ஒன்றியம் கம்மாளப்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆறாம் வகுப்பு படித்தவரும் இரண்டு மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
இதனை கண்ட அதே பள்ளியில் படிக்கக்கூடிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் வம்பு இழுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இன்னொரு ஆறாம் வகுப்பு மாணவன் அவர்களை ஒருமையில் பேசியிருக்கிறான். இதனால் கோபமடைந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஆறாம் வகுப்பு மாணவர்களை வகுப்பறையில் தொங்கவிட்டுள்ளனர்.
மற்றொரு மாணவரை வகுப்பறை ஆணியில் தொங்கவிட்டுள்ளனர். இதில் காயம் அடைந்த மாணவன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காதது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.






