--- --:--:-- --

வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு கடத்தல் நாடகம் ஆடிய சிறுமி..!

4

வெளிநாடு செல்வதற்கு ஆசைப்பட்டு தன்னிடம் 30 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கடத்தல் நாடகமாடிய இளம் பெண்ணின் செயலால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷோபுரி என்பவரின் மகளான காவியா கடத்தப்பட்டதாக அவரது புகைப்படங்கள் வாட்ஸப்பில் வந்தன.

 

அதில் காவியாவின் கைகள் மற்றும் கால்களை கயிற்றால் கட்டி கடத்திய நபர் 30 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியது.

 

விடுதியில் தங்கியபடி கோட்டாவில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படிப்பதாக கோரி காவியா ஏமாற்றி வந்தது தெரிய வந்தது. சோதனை செய்த பொழுது காவியா கடத்தப்படவில்லை என்பதும் அனைத்தும் பொய்யானது என்பதையும் கண்டறிந்த போலீசார் கடத்தல் நாடகம் மேற்கொண்டதற்கான பொருட்களையும் கண்டெடுத்தனர்.

 

கடத்தல் நாடக விவகாரத்தின் உதவியால் போலீசார் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடத்தியதில் வெளிநாடு செல்ல பணம் தேவைப்பட்டதால் இந்த கடத்தல் நாடகத்தை காவியா அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது. மேலும் தலைமறைவாக உள்ள காவியாவை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon