நான்கு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!
மத்திய பிரதேசத்தில் நான்கு வயது சிறுமியிடம் செல்போனில் வீடியோ காண்பித்து பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தார். மத்திய பிரதேசத்தில் நான்கு வயது குழந்தை பெற்றோருடன் தீபாவளி பண்டிகைக்காக உறவினர் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.
அப்பொழுது அருகில் இருந்த ராஜ்குமார் என்ற உணவக ஊழியர் ஒருவர் தினமும் அந்த குழந்தைக்கு வீடியோவை காண்பித்து சிறுமியிடம் அத்து மீறியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை தனிப்படை அமைத்து தேடிய போலீசார் உணவக ஊழியர் ராஜ்குமாரை கைது செய்தார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில் அவர் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமையை செய்ததும் குழந்தையை அருகில் உள்ள புதரில் வைத்ததையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி ஆபத்தான நிலையில் உள்ளார். எனவே அவரை கைது செய்த போலீசார் வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.





