மருத்துவ கவுன்சிலில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த போலி மருத்துவர் கைது..!
தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும் என்ற போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு அதே பகுதியில் சொந்தமாக கிளினிக் நடத்தி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக தெரிகிறது.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலியில் அலுவலகத்திற்கு வந்த அவர் தனது சான்றிதழ் சமர்ப்பித்து மருத்துவராக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அப்பொழுது அது போலி மருத்துவ சான்று என தெரிய வந்ததால் சந்தோஷ்குமார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர்.






