--- --:--:-- --

கொரொனாவை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து..!

8

கொரொனாவை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து ஒன்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆன்டி-வைரல் மருந்தை அமெரிக்காவின் ஜார்ஜியா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக மைக்ரோபயாலஜி மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.

 

இது வாய் வழியாக உட்கொள்ளப்படும் மருந்து என்பதால் கொரொனா தொற்று ஏற்பட்டாலும் அது தீவிர நோயாக மாறுவதைத் தடுப்பதுடன் தொற்றைகுறைத்து நோயாளிகள் நீண்ட நாட்கள் தனிமைப் படுத்தப் படுவதைத் தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மருந்து இப்பொழுது இரண்டு மற்றும் இறுதி கட்ட கிளினிக்கல் சோதனை கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon