400 அடி பள்ளத்தாக்கில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம்..!
திண்டுக்கல் மாவட்டம் அய்யன்கோட்டை முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டவரின் சடலம் 400 அடி பள்ளத்தாக்கில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. 25 வயது நபரும் அவரது உறவினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 3 நாட்களாக காணவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டதால் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது கடத்தி சென்று கொலை செய்து நீர்வீழ்ச்சி பகுதி பள்ளத்தாக்கில் வீசியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 400 அடி பள்ளத்தாக்கில் இருந்து உடல் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் 3 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





