--- --:--:-- --

தமிழ்நாட்டில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது..!

1

மிழகத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாளை காலை 5 மணி வரை இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

 

டாஸ்மாக், மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை ஊரடங்கு வெறிச்சோடி காணப்பட்டது. நடு இரவு 12 மணிக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

 

மெட்ரோ ரயில் சேவை இயங்காத போதிலும் மின்சார ரயில்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. ஹோட்டல்களில் பார்சல் சேவைக்கும் உணவுகளை டெலிவரி. செய்யும் நிறுவனங்களுக்கு விநியோகிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

ரயில் விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்லலாம் என்றும் ஆனால் போலீசாரின் வாகன சோதனையின்போது பயணச்சீட்டை காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் திருமண அழைப்பிதழ்களை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அலங்கரிக்கப்படுகிறது.

 

உணவு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். மாநகரில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர்.

 

இன்று அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் செல்வோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

 

ஊழியர்கள், அத்தியாவசிய பணியாளர்களுக்கும் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Right Menu Icon