--- --:--:-- --

இன்ஸ்டாகிராமால் மானத்தை இழந்த கல்லூரி மாணவன்!

10

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள வியத்தகு முன்னேற்றங்கள், உலகம் என்று உள்ளங்கை அளவிற்கு சுருங்கிவிட்டது. சென்னை அயனாவரத்தில் சேர்ந்த ஐசக் என்ற கல்லூரி மாணவர் புதிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.

 

பிரியா என்ற இரண்டு எழுத்து பெண் பெயரில் வந்த ஒரு குறுஞ்செய்தியை நம்பி தனது முகத்தை காட்டி நிர்வாணமாக வீடியோ கால் செய்ததாக கூறும் ஐசக் அந்த வீடியோ காட்சியை யூடியூபில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி ஒரு கும்பல் தன்னிடம் பணம் பறித்து வருவதாக வேதனை தெரிவித்தார். போன்பே பணப்பரிவர்த்தனை செயலி மூலம் இதுவரை 59 ஆயிரம் ரூபாயை இழந்து விட்டதாக ஐசக்.

 

மோசடி கும்பலின் மிரட்டல் தொடர்கதையாக நீடித்ததால் வேறுவழியில்லாமல் போலீசில் புகார் கொடுத்தார். வெட்கத்தைவிட்டு நடந்த சம்பவங்களை போலீசின் விலாவாரியாக சொல்லிய கல்லூரி மாணவரைப் போல வேறு சில இளைஞர்களும் இந்த மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாந்து இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

 

இன்ஸ்டாகிராமில் பெண் ஐ‌டியில் அறிமுகமாகி கல்லூரி மாணவர்களையும் இளைஞர்களையும் மோசடி வலையில் வீழ்த்தி பணம் பறிக்கும் கும்பலை கூண்டோடு பிடிக்க சென்னை கீழ்ப்பாக்கம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

 

சமூக வலைதளங்களில் முன் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எல்லை மீறிப் பேசினால் இதுபோன்ற மோசடி கும்பலிடம் சிக்கி தவிக்க நேரிடும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். எது எப்படியோ நாம் உஷாராக இருந்தால் நிச்சயம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும்.

Leave a Reply

Right Menu Icon