அசுர வேகத்தில் வந்து மோதிய கார்..ஒருவர் பலி..நால்வர் படுகாயம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டையில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பொழுது அதிவேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
மோதிய வேகத்தில் நிலைகுலைந்த காரும் தலைகுப்பற கவிழ்ந்ததில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.






