வேலூரில் பைக் மீது மோதிய கார்..!
வேலூரில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியாத்தம் அருகே உள்ள நடுப்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





