--- --:--:-- --

பள்ளிக்கருகே மது கடை இருப்பதாக புகார் கூறி நீதிமன்றத்திற்கு சென்ற 5 வயது சிறுவன்..!

4

னது பள்ளிக்கருகே மதுக்கடை இருப்பதாக ஐந்து வயது சிறுவன் நீதிமன்றத்திற்கு சென்று குற்றம் சாட்டிய சம்பவம் உத்திரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பள்ளி அருகே மதுக்கடை அமைந்துள்ளது.

 

இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் அவதி அடைந்து வரும் நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் ஐந்து வயது மாணவர் நீதிமன்றத்திற்கு சென்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

தனது பள்ளிக்கு அருகே மது கடை இருப்பதால் தொந்தரவாக இருப்பதாக தந்தையின் உதவியுடன் அவர் நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டுள்ளார். மேலும் கடைக்கு சட்டவிரோதமான முறையில் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலால் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Right Menu Icon