--- --:--:-- --

குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு..!

4

சென்னை பல்லாவரம் அருகே குதிரை எட்டி உதைத்ததில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் உயிரிழந்தார். பம்மல் பகுதி தெருவில் வசித்து வருபவரும் கால் டாக்சி ஓட்டுனர் இவரது இரண்டாவது மகன் கௌதம் கிருஷ்ணா. 4 வயது சிறுவன் கௌதம் யுகேஜி படித்து வந்தார்.

 

சம்பவத்தன்று மாலை கௌதம் கிருஷ்ணா வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபொழுது மேய்ச்சலில் இருந்த குதிரை ஒன்று கௌதம் கிருஷ்ணரின் மார்பில் எட்டி உதைத்தது. சிறுவன் வலியால் துடிதுடித்து மயங்கி கீழே விழுந்து உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்து சென்றபோது சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

 

தகவலின் பேரில் தனியார் மருத்துவமனைக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon