--- --:--:-- --

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 28 வயது இளம்பெண்..!

10

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 28 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மரத்துப்பட்டி அருகே தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. குழந்தைகள் பராமரிப்பாளராக பணியாற்றி வரும் பல்லவராயன்பட்டியை சேர்ந்த முனீஸ்வரிக்கு திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

 

இவர் இதை காப்பக விடுதியில் தங்கி பயின்று வரும் ஆண்டிப்பட்டியை சேர்ந்த 10 வயதான சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

அந்த சிறுவன் மற்றொரு தனியார் தொண்டு நிறுவன காப்பகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் மன ரீதியான பாதிப்புகளுடன் மிகவும் உடல் சோர்வாக காணப்பட்டுள்ளார்.

 

அங்குள்ள காப்பக விடுதி பராமரிப்பாளர்கள் இது குறித்த விசாரித்த பொழுது முனிஸ்வரி தனக்கு பாலியல் சந்தர்ப்பம் கொடுத்ததை சிறுவன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை தொடர்ந்து விடுதி நிர்வாகத்தினர் தேனி குழந்தைகள் நல அலுவலரிடம் தகவல் அளித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் முனீஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon