--- --:--:-- --

தேங்காய் நார் இயந்திரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலி..!

6

ழனி அருகே தேங்காய் நார் இயந்திரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அணிசந்திரா. இவருக்கு திருமணம் ஆகி நான்கு வயதில் சுஷ்மிதா இரண்டு வயதில் ஜுமீதா என்ற பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

தேங்காய் மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் ஆலையில் வேலை செய்து வரும் சேந்திரா குடும்பத்துடன் அங்கேயே உள்ள ஒரு அறையில் தங்கி உள்ளார். வழக்கம் போல குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

 

இதனிடையே வீட்டை விட்டு ஆலைப்பகுதியில் விளையாடி இரண்டு வயது குழந்தை ஜூமீதா தேங்காய் மட்டை அரைக்கும் இயந்திரத்தின் அருகே சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

 

சத்தம் கேட்டு அங்கு வந்த இருவரும் குழந்தையின் உடல் இயந்திரத்தில் ரத்தமும் சதையுமாய் சிக்கி கடந்ததை கண்டு கதறி அழுதனர்.

 

Right Menu Icon