காதலை ஏற்காததால் 17வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை
மதுரை அலங்காநல்லூர் அருகே பள்ளி மாணவி காதலை மறுத்ததால் ஒருதலையாக காதலித்த 17 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.
குலமங்கலம் காலையில் மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்த சிறுவன் ஒருவன் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகவும் சிறுவனின் காதலை மாணவி நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியில் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் 80% தீக்காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.





