--- --:--:-- --

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

3

மிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக பகுதிகளில் நிலவும் வாழும் நிலைக்கு சுழற்சியின் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருநெல்வேலி மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Right Menu Icon