சாய் பல்லவிக்கு குவியும் ஆதரவு..!
மனிதர்கள் அனைவரும் ஒன்றுதான் அதைத்தான் சொன்னேன் என்று நடிகை சாய் பல்லவி விளக்கமளித்துள்ளார். அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த சாய்பல்லவி திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை செய்யப்பட்டதை காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
அது வன்முறை என்றால் சமீபத்தில் பசுவை அழைத்து சென்று இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஜெய் ஸ்ரீராம் என்று கூறியது தவறு என சாய்பல்லவி கூறிய பேட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. சாய்பல்லவிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டது.
இந்நிலையில் அந்த பேட்டியில் தான் பேசியது தொடர்பாக சாய் பல்லவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தன்னை பொறுத்தவரை மனிதர்கள் அனைவருமே ஒன்று தான் என்று அதைத்தான்பேட்டியில் கூறினேன் என விளக்கமளித்தார். ஒரு மருத்துவ பட்டதாரியாக எந்த உயிரையும் இனம், மதம், சாதி, கலாச்சார மொழி அடிப்படையில் பிரித்துப் பார்க்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்த ஒரு மதம், சாதி போன்றவற்றிற்காக துன்புறுத்தப்படக்கூடாது என்று கூறிய சாய் பல்லவி தான் எப்போதும் நடுநிலையாக இருப்பேன் என்றும் நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டதாகவும், உண்மைத் தன்மையை ஆராயவில்லை எனவும் தெரிவித்தார்.






