நாளை முதல் பள்ளி, அரசு அலுவலகங்கள் மூடல் அரசு அதிரடி..!
இலங்கையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை முதல் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.நாளை அரசின் அறிவிப்பு நடைமுறைக்கு வரும் எனவும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளில் அவசரமாக மேற்கொள்ளவேண்டிய அறுவை சிகிச்சைகளை மட்டும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் வீட்டிலிருந்து இயங்கும் வகையில் வகுப்புகளை திட்டமிட வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையில் பொது போக்குவரத்து 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நிலவும் அமெரிக்க டாலர்கள் தட்டுப்பாடு காரணமாக எஞ்சின் ஆயிலுக்கான தொகையை செலுத்த முடியாததால் ரயில் சேவையும் விரைவில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.






