அதிவேகமாக வந்த பைக் மீது வேன் மோதியதில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி காட்சி..!
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே அதிவேகமாக வந்த பைக் எதிரே வந்த வேன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் படுகாயம் அடைந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மனோஜ் என்பவர் பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.
இவர் பேருந்து நிலையம் முன்பு இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த ஒரு ஆட்டோவை முந்த முயன்ற பொழுது பேரூந்தில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.






