--- --:--:-- --

சுகாதார செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்புச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளதால் ஏற்றம் காணுமா கூட்டுறவுத் துறை

1.1

திடீர் டிரான்ஸ்பர்

திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மாறாக தங்களுக்கு சாதகமில்லாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கொத்துக்கொத்தாக
பணியிடமாற்றம் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சூப்பர் பணி

தமிழக அரசு சுகாதாரத் துறைச் செயலாளராக முந்தைய அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர் திமுக ஆட்சியிலும் சுகாதாரத் துறைச் செயலாளராக தொடர்ந்து வந்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணிகளை செய்ததால் பொது மக்கள் இடத்தில் இவருக்கு நல்ல பெயரும், பாராட்டும் கிடைத்தது… தமிழகத்தில் கொரோனா தொற்று கணிசமாக குறைக்கப்பட்டதற்கு இவருக்கும் பங்கு உண்டு அப்படியிருந்தும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன காரணம்?

இதனிடையே ராதாகிருஷ்ணன் மாற்றம் குறித்து சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் பரபரத்து வருகின்றன.. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சுகாதாரத் துறையில் முறைகேடுகள் நடப்பதாக சில தகவல்களை எடுத்துவைத்திருந்த நிலையில், 2ம் கட்ட அதிகாரிகள் மூலமே அந்தத் தகவல்கள் அண்ணாமலைக்குக் கிடைத்ததாகவும், ராதாகிருஷ்ணனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும்,அதனாலேயே இந்த மாற்றம் என்றும் கூறப்படுகிறது.

நல்ல துறை

மற்றொருபக்கம், ராதாகிருஷ்ணன் மாற்றம் என்பது வழக்கமான அரசின் நடைமுறையே.. தென்காசி, திருச்சி, ராமநாதபுரம், தர்மபுரி கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளதை போலதான், ராதாகிருஷ்ணனும் மாற்றப்பட்டுள்ளார்.. அதுமட்டுமல்ல, ராதாகிருஷ்ணன் இன்னொரு துறைக்கும் செயலாளராகத்தானே போயிருக்கிறார்.. கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு என்பது மக்களோடு மேலும் அவர் தன்னை நெருக்கப்படுத்திக் கொள்ளக்கூடிய, ஐக்கியப்படுத்திக்கொள்ளக்கூடிய துறைதான்.. அது மிகவும் நல்ல துறை என்பதால்தான் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என்கிறார்கள்.

 

இதனிடையே கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ராதாகிருஷ்ணன் அவர்களை பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் கூறி வரவேற்று மகிழ்ந்துள்ளனர். அவர்கள் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் எங்கள் துறைக்கு வருவது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி எனவும் மேலும் இந்தத் துறையில் நல்ல மாற்றங்கள் நடக்கும் என்பதையும் நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்கள்.இந்நிகழ்வில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள திரு.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. அவர்களை தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் (டாக்பியா) சார்பில் அதன் மாநில பொதுச் செயலாளர் திரு.காமராஜ் பாண்டியன், ஓய்வு பெற்றோர் நல பிரிவு பொதுச் செயலாளர் திரு.முத்துப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். உடன் மாநில தலைவர் திரு.மணிவண்ணன், தென் மண்டல செயலாளர் ஆ.ம.ஆசிரிய தேவன், மாநில பொருளாளர் திரு.சேகர், மாநில துணைத் தலைவர் திரு.நடராஜன், மாநில இணைச் செயலாளர்கள் திரு.சேகர், திரு.செந்தில் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon