ஆழ்குழாய் கிணற்றிலிருந்து சிறுவனை மீட்டவர்களுக்கு கவுரவம்..!
சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்ட வீரர்களை முதலமைச்சர் தனது இல்லத்திற்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் 68 அடி ஆழத்தில் விழுந்த 11 வயது சிறுவன் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டான்.
ராணுவ தேசிய பேரிடர் மீட்பு படை, உள்ளூர் காவல் துறையினர் என மொத்தம் 500 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆழ்குழாய் கிணற்றுக்குள் பக்கவாட்டில் கடினமான பாறைகளை உடைத்து பாதை ஏற்படுத்தி சிறுவனின் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவரையும் முதலமைச்சர் தனது இல்லத்திற்கு வரவழைத்து கவுரவித்தார்.
அப்பகுதியில் பாம்புகள், தேள்கள் நிறைந்து காணப்பட்டதாகவும் இத்தகைய சவால்களை மீறி சிறுவனை மீட்டதாகவும் பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்தனர். சதீஷ்கர் வரலாற்றில் இதுபோன்று பெரிய அளவில் மீட்பு பணி இதற்கு முன்பு நடந்தது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சிறுவன் பேச்சு மற்றும் செவித்திறன் அற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது லேசான காயத்துடன் இருந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




