--- --:--:-- --

கோயில் விழாவுக்கு ஹெலிகாப்டரில் சென்ற குடும்பம்..!

8

தூத்துக்குடி அருகே கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினர் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

இந்த நிலையில் இதே கிராமத்தை பூர்வீகமாக கொண்டு சென்னையில் வசிக்கும் நடராஜன் என்பவர் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை கும்மிடிப்பூண்டியில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தீத்தாம்பட்டி குடும்பத்துடன் வந்து அசத்தியுள்ளார்.

 

பின்னர் விழா முடிந்ததும் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்று உள்ளார் இந்த நிகழ்வு அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon