--- --:--:-- --

இதயத் துடிப்பு அதிகமானதால் தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதி..!

2

பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஹைதராபாத்தில் அமிதாப்பச்சனுடன் நடிக்கும் புதிய படத்துக்காக வந்த தீபிகா தனது உடல்நிலை சரியில்லை என்றும் இதயத் துடிப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறியதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

பரிசோதனைக்கு பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பினார். அடுத்த சில மணி நேரங்களில் அவர் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.

 

Right Menu Icon