இங்கிலாந்தில் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு..!
இங்கிலாந்தில் மேலும் 14 பேருக்கு குரங்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்பொழுது பல உலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் குரங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது.





