தாய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க அனுமதி தராத வார்டன்..! பள்ளி மாணவன் விபரீத முடிவு..!
தாயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க ஹாஸ்டல் வார்டன் செல்போன் கொடுக்க மறுத்ததால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது. கர்நாடக மாநில பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மங்களூருவில் உள்ள தனியார் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த ஜூன் 11 ஆம் தேதி அவரின் தாயாருக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்த்து தெரிவிக்க ஹாஸ்டல் வார்டனிடம் செல்போன் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுத்ததால் தாய்க்கு வாழ்த்து செய்தி தெரிவிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் விதிமுறைகளின்படி மாணவனுக்கு செல்போன் கொடுக்க மறுத்ததாக ஹாஸ்டல் வார்டன் போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் அங்கு வந்த பெற்றோர் வார இறுதி விடுமுறை நாட்களில் ஹாஸ்டலில் அவருடன் பேசவேண்டும் எனவும், தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அனுமதி மறுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.






