--- --:--:-- --

அம்மிக்கல்லால் அடித்து துப்புரவு பெண் பணியாளர் படுகொலை..!

6

டலூர் மாவட்டம் புவனகிரி அருகே துப்புரவு பெண் பொறியாளர் அம்மி கல்லால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழமணக்குடி கிராமத்தை சேர்ந்த சீதாலட்சுமி என்பவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

 

நேற்று இரவு வீட்டிற்கு வந்த சீதாலட்சுமி வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது நெற்றியில் ரத்த காயத்துடன் அவர் சடலமாக கிடந்தார். ஊர்மக்கள் அளித்த தகவலின்பேரில் புவனகிரி போலீசார் அவரின் உடலை மீட்டு விழுப்புரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்ததில் வீட்டிற்குப் பின்புறம் ரத்தக்கறையுடன் அம்மிக்கல் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளியை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon