சுத்தம் செய்யப்படாத பள்ளிகளுக்கு ஆட்சியர் கடும் எச்சரிக்கை..!
வேலூர் மாவட்டத்தில் சுத்தம் செய்யப்படாமல் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்த கொரொனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பெண் செய்தியாளரிடம் பேசிய அவர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தி குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்திருக்க வேண்டும் என்றும் அவ்வாறு சுத்தம் செய்யாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.






