--- --:--:-- --

விசாரணைக் கைதி உயிரிழப்பு – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற முடிவு..!

5

சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் போலீசார் ராஜசேகர் என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

 

மாலை 5 மணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது உடல் நிலை மோசமானதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜசேகர் உயிரிழந்துள்ளார்.

 

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழந்ததால் துணை ஆணையர் ஈஸ்வரன் இணை ஆணையர் ராஜேஸ்வரி கூடுதல் ஆணையர் அன்பு ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அதேநேரத்தில் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பட்டினத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் ஐம்பத்தி மூன்று நாட்களில் மீண்டும் ஒருவர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon