--- --:--:-- --

சாலையில் சென்று கொண்டிருந்த பைக் திடீரென பற்றி எரிந்தது..!

9

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வள்ளுவர் கோட்டம் சாலை வழியாக இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேரிட்டது.

 

சுதாரித்துக்கொண்ட இளைஞர் வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றார். பின்னர் அங்கிருந்தவர்கள் விரைந்து செயல்பட்ட வாகனத்தின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

 

Right Menu Icon