பாம்புடன் வசித்த மூதாட்டியால் பரபரப்பு..!
கர்நாடக மாநிலத்தில் வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்புடன் நான்கு நாட்களாக வசிக்கும் மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மானஸா. மூதாட்டியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டிற்குள் நாகப்பாம்பு வந்துள்ளது. பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் நாகப்பாம்பு வீட்டிற்கு வந்ததும் இறந்துபோன கணவர் பார்க்க வந்திருப்பதாக கருதி அதற்கு பால் ஊற்றி வளர்த்து வந்துள்ளார்.
வீட்டின் ஒரு ஓரத்தில் பாம்பும் 4 நாட்களாக அந்த பாம்பு உடனேயே அவர் தங்கியிருந்துள்ளார். தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் தனது கணவர் தான் பாம்பாக வந்துள்ளார் என கூறி பாம்பை பிடிக்க கூடாது என்றும் வீட்டில் இருந்து வெளியேற்ற கூடாது எனவும் கூறி தடுத்து விட்டார்.
மேலும் பாம்பை பிடிக்க முயன்ற பொழுது மூதாட்டி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் முயற்சியை கைவிட்டனர்.





