முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..!
நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. கடந்த 21ஆம் தேதி நாடு முழுவதும் 849 மையங்களில் முதுநிலை தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 318 பேர் நீட் தேர்வு எழுதினர். அதற்கான முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தேர்வில் தேர்ச்சி அடைந்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.
பத்து நாட்களிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்டதற்கு தேசிய தேர்வு வாரியத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகளை www.nbe.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.





