--- --:--:-- --

மனைவியை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த கணவன்..!

10

விவாகரத்து தராததால் மனைவியை கொன்ற கணவர் உடலை சூட்கேசில் அடைத்து ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பதியைச் சேர்ந்த பத்மாவும், சத்ய நாராயணபுரம் பகுதியை சேர்ந்த மின்பொறியாளர் வேணுகோபாலனுக்கும் 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

 

ஆனால் வேணுகோபால் பத்மாவதியை அடித்து நிர்வாணமாக்கி கொடுமை படுத்தி வந்ததால் பொறுத்துக்கொள்ள இயலாத பத்மா கடந்த ஆண்டு தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து விவாகரத்து கோரி வேணுகோபால் வழக்கு தொடர்ந்த நிலையில் ஜனவரி மாதம் நான்காம் தேதி வேணுகோபால் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.

 

இதை உண்மை என நம்பிய அவர் மீண்டும் கணவர் வீட்டுக்கு சென்ற நிலையில் வீட்டில் வைத்து பத்மாவிடம் விவாகரத்து தரக்கோரி வேணுகோபால் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் மனைவி மறுத்ததால் ஆத்திரமடைந்த வேணுகோபால் தனது தாய், தந்தை மற்றும் நண்பன் சந்தோஷ் உடன் இணைந்து பத்மாவை அடித்து கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வெங்கடாபுரம் ஏரியில் வீசியுள்ளார்.

 

ஐந்து மாதங்களாக பத்மா நலமுடன் இருப்பதை போல அவரது பெற்றோரை நம்ப வைத்த வேணுகோபால் கடந்த 18ஆம் தேதி விவாகரத்து வழக்கில் தனியாக ஆஜரானார். இதனால் சந்தேகம் அடைந்த பத்மாவதி தாயார் போலீசில் புகார் அளித்தார்.

 

வேணுகோபால் மனைவியை அடித்துக் கொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் வேணுகோபால், அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள நண்பர் சந்தோஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon