ஒர்க் அவுட்டிற்கு பிறகு புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிக்பாஸ் ஷெரின்..!
தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன்பிறகு சில படங்களே நடித்த அவர் பிறகு என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்தது. பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் அட துள்ளுவதோ இளமை நடிகையா இது என ஷாக்காக பார்த்தார்கள்.
பிக்பாஸ் பிறகு நடிகை ஷெரின் கடுமையான ஒர்க் அவுட் செய்து உடல்எடை குறைத்து பழைய நிலைமைக்கு வந்தார். இப்போது அவர் தனது வீட்டில் ஒர்க் அவுட் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




