மோதிய வேகத்தில் பைக்கில் பற்றிய தீ..!
திண்டுக்கல் அருகே தாண்டிக்குடி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பைக் மீது மோதிய விபத்தில் தீப்பற்றி எரிந்தது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே பெருமாள் கோயில் பட்டியை சேர்ந்தவர் வர்கீஸ். இவர் தாண்டிக்குடி மலைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த தனியார் பேருந்து பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கவிழ்ந்தது. படுகாயமடைந்த நிலையில் அவரது பைக் மளமளவென தீப்பிடிக்க தொடங்கியது.
சுதாரித்துக்கொண்ட அவர் அங்கிருந்து தப்பியோடினார். பைக் மளமளவென தீ பற்றி எரிய தொடங்கியது. பெட்ரோல் டேங்க் வெடித்து விடுமோ என்ற பதற்றம் ஏற்பட்ட நிலையில் நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





