--- --:--:-- --

மணமகன் விக் கழன்றதால் திருமணத்தை நிறுத்திய மணமகள்..!

9

பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என தாத்தா பாட்டி காலத்தில் இருந்து சொல்லிக் கேட்டிருப்போம். இன்று ஒரு பொய் சொல்லி திருமணத்தில் அதுவே முட்டுக்கட்டையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமண நிகழ்ச்சியை முன்னிட்டு திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

 

திருமணத்தன்று பாதி சடங்குகள் முடிந்து விட்டன. மேலும் முக்கிய சடங்கு அதிகாலை திட்டமிடப்பட்டது. ஆனால் அப்பொழுது யாருக்கும் தெரியாது அதிகாலை சூழல் தலைகீழாக மாறும் என்று. திட்டமிட்டபடி அடுத்த நாள் அதிகாலை மணமகளின் சடங்கை நிறைவேற்ற மண்டபத்தை நோக்கி வந்துள்ளார்.

 

கீழே விழுந்ததில் மணமகனின் விக் கழன்று விழுந்துள்ளது. இதனை அங்கிருந்த அனைவரும் பார்த்துவிட மாப்பிள்ளை வழுக்கை என்பது மணமகள் மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியவந்தது. மணமகனுக்கு வழுக்கை என்று தெரிந்தவுடன் அதிர்ச்சி அடைந்த மணமகள் திருமண சடங்குகளுக்கு செல்ல மறுத்துள்ளார்.

 

இந்த உண்மையை மருமகன் குடும்பத்தினர் மறைத்து விட்டதாகவும் இனி என்னால் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என தனது நிலைப்பாட்டில் உறுதியாக கூறிவிட்டார்.

 

Right Menu Icon