போன் பேசிக்கொண்டே பயணிகளை அச்சுறுத்திய அரசு ஓட்டுநர்..!
திருவண்ணாமலை அருகே நீண்ட நேரமாக செல்போனில் பேசியபடியே ஒற்றைக் கையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னை அடையாறு பகுதியில் 50 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து செல்போனில் பேசியபடி ஒற்றைக் கையில் பேருந்தை இயக்கியபடி சென்றுள்ளார். போக்குவரத்து நிறைந்த சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கியதால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
செல்போனில் பேசியபடியே ஓட்டிய அரசு பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






