மேட்டூர் அணையை இன்று திறக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ள நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று அணையைத் திறந்து வைக்க உள்ளார். டெல்டா பாசனப் பகுதியில் முன்கூட்டியே குறுவை சாகுபடி மேற்கொள்ள வசதியாக நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.
அந்த வகையில் மேட்டூர் அணையிலிருந்து இன்று நீர் திறக்கப்பட உள்ளது. இதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று இறங்கிய திமுகவினர் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பளித்தனர். அப்பொழுது பொதுமக்கள் பலரிடம் அவர் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று காலை 10 மணியளவில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவி வரவேற்பு அளிக்க உள்ளார். மேட்டூர் அணையின் வரலாற்றில் 1942 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை நான்கு முறை மே மாதத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது.
அதன் பிறகு 77 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பருவமழைக்கு முன்னதாகவே அணை திறக்கப்பட உள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு கோடை காலத்தில் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி அளவுக்கு அதிகரித்து சாதனை படைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





