ஆற்றங்கரையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி..!
தஞ்சாவூரில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். தஞ்சாவூர் ஆற்றங்கரை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பொங்கல் வைத்து சுவாமிக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர்.
நயன்தாராவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் குலதெய்வமான காஞ்சி காமாட்சி கோயிலுக்கு அவர்கள் சேர்ந்து சென்றனர். கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர்.
அப்போது அந்த பகுதியில் நயன்தாராவை பார்த்த பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என ஏராளமான ரசிகர்கள் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர். தொடர்ந்து நடிகை நயன்தாரா பொங்கல் வைத்து பிரசாதங்களை அங்குள்ள மக்களுக்கு வழங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





