தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 27-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லட்சத்தீவு அதையொட்டிய தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்க கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





