பர்தா அணிந்து வந்து குண்டு வீசி ஓடிய பயங்கரவாதி..!
காஷ்மீரில் புதிதாகத் திறந்த மதுபானக்கடை மீது பர்தா அணிந்து வந்த பயங்கரவாதி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் கடை ஊழியர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள மக்களை குறிவைத்து சில நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் புல்வாமா மாவட்ட பகுதியில் நேற்று புதிதாக மதுபானக்கடை திறக்கப்பட்டது. அந்த கடையில் ஜம்முவை சேர்ந்த ரஜித் சிங், கோவர்தான் சிங், கோவித் சிங், ரவிக்குமார் உள்ளிட்டோர் பணியாற்றினார்.
இந்த கடைக்கு வந்த பயங்கரவாதி மதுபான கடை ஊழியர்களை குறிவைத்து வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றார். இத்தாக்குதலில் படுகாயமடைந்த கடை ஊழியர்கள் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தாக்குதலை நடத்தியது லஷ்கர் பயங்கரவாத அமைப்பு என தெரியப்படுத்தப்பட்டுள்ளது. குண்டுவீச்சு தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.






