--- --:--:-- --

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

1

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எல் நாகேஸ்வர ராவ், பி‌ஆர் ஹவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரித்து வருகிறது.

 

பேரறிவாளனை விடுதலை செய்வது யாருடைய அதிகாரம் என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் ஆளுநரின் அதிகாரம் என பல தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

 

இதுபோன்ற சூழலில் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon