--- --:--:-- --

ஜன்னல் க்ரில்லில் தூக்கில் தொங்கிய 20 வயது இளம் நடிகை..!

8

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை மற்றும் மாடலான சஹானா என்பவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் நடிகை சஹானா.

 

இவர் சில மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். பிரபல மாடலான அவர் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்து அதிகம் பாப்புலர் ஆனார். அவருக்கு 20 வயது மட்டுமே ஆகிறது.

 

அவருக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஜன்னல் கிரில்லில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் அவர் உடன் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. போலீசார் நடிகையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சஹானாவின் கணவர் சஜாத் தொடர்ந்து பணம் கேட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் வரக்கூடாது, போனில் கூட பேசக்கூடாது என்கிற நிலையில் தான் சஹானாவை அவர் வைத்திருந்தார் என் சஹானாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருக்கின்றனர்.

 

அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என பெற்றோர் புகார் அளித்து இருப்பதால் தற்போது போலீஸ் சஜாத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon