இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது..!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 13 வயது சிறுமியிடம் அத்துமீறிய இளைஞரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். தியாகராய நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினரின் 13 வயது மகள் கடந்த 6ஆம் தேதி முதல் மாயமான நிலையில் அதிர்ந்து போன பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியதில் பம்மல் பகுதியைச் சேர்ந்த உமாபதி என்ற இளைஞருடன் சிறுமிக்கு இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது. பின்னர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அத்துமீறியதும் வெளியான நிலையில் போலீசார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.





