--- --:--:-- --

கண்ணம்மா ரோஷினி புகைப்படம் வைரல்..!

14

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு வெற்றிகரமாக ஓடிவந்தது. அதில் முக்கிய நாயகியாக நடித்து வந்தவர் நடிகை ரோஷினி. இவர முதலில் மாடலிங் துறையில் தான் தனது பணியை தொடங்கியுள்ளார்.

 

அதன் மூலம் தான் அவருக்கு பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சீரியல் மூலம் அவருக்கு பெரிய ரீச் கிடைத்தவுடன் அவர் தொடரில் இருந்து விலகிவிட்டார்.சீரியலில் இருந்து விலகிய ரோஷினி படங்களில் நடிப்பார் என்று பார்த்தால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இப்போது வரை நிகழ்ச்சியில் இருக்கிறார், ஆனால் அந்நிகழ்ச்சியில் அவர் எத்தனை எபிசோடு வருவார் என தெரியவில்லை.

 

இந்த நிலையில் நடிகை ரோஷினி வித்தியாசமாக புடவை கட்டி வேறொரு லுக்கில் எடுத்த போட்டோ ஷுட் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதைப்பார்த்த ரசிகர்கள் நல்ல லுக், சூப்பர் என கமெண்ட் செய்கின்றனர்.

Right Menu Icon